விஜய் டிவியில் ஒளிபரப்பான மஹாபாரதம் தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் கவிதா கௌடா.இதனை தொடர்ந்து கன்னடத்தில் ஒளிபரப்பான லக்ஷ்மி பிரம்மா என்ற தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் கவிதா கௌடா.இதனை தவிர சில கன்னட சீரியல்களில் நடித்திருந்தார் கவிதா.

தமிழில் நீலி தொடரில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார் கவிதா கௌடா.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் இவர் ஒரு ஹீரோயினாக நடிக்கவிருந்தார் ஆனால் சில காரணங்களால் இவர் நடிக்கமுடியாமல் போனது.இதனை தவிர சில படங்களிலும் நடித்து அசத்தி இருந்தார்.

கன்னட பிக்பாஸ் தொடரில் பங்கேற்ற கவிதா பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானவராக மாறினார்.இவர் நடித்த லக்ஷ்மி பிரம்மா தொடரில் இவருடன் இணைந்து நடித்தவர் சந்தன்குமார்.இருவரும் தொடர் நிறைவடைந்த பிறகும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.

தற்போது ஏப்ரல் 1ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.கொரோனா காரணாமாக இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.கவிதாவிற்கும் அவரது வருங்கால கணவருக்கும் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இருவருக்கும் மே மாதம் திருமணம் நடைபெறும் என்று தெரிகிறது.

A post shared by K A V I T H A (@iam.kavitha_official)