தமிழ் சினிமாவில் வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக கலக்கி வரும் இயக்குனர், நடிகர் S.J.சூர்யாவின் இயக்கத்தில் தளபதி விஜய்-ஜோதிகா நடித்து வெளிவந்த திரைப்படம் . கிட்டத்தட்ட குஷி திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்றும் மக்களால் வெகுவாக ரசிக்கப்படுகிறது. 

S.J.சூர்யா எழுதி இயக்கிய குஷி திரைப்படத்திற்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்திருந்தார். தேவாவின் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மெகா ஹிட்டானது. அழகான காதல் கதையாக வெளிவந்த இத்திரைப்படம், இரண்டு காதலர்களுக்கு இடையிலான அழகான காதலும் கர்வமும் செய்யும் சேட்டைகளை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. 

இன்றும் ரசிகர்கள் கொண்டாடி வரும் இத்திரைப்படத்தைப் பற்றி சமீபத்தில் டுவிட்டரில் இயக்குனர் S.J.சூர்யாவிடம் ரசிகர் ஒருவர், “குஷி திரைப்படத்தின் இறுதி காட்சியில் விஜய் ஜோதிகா இருவரிடமும் செல்போன் இருந்திருந்தால் திரைப்படம் 15 நிமிடங்களுக்கு முன்பாகவே முடிந்திருக்கும். ரயில்வே ஸ்டேஷன் சீன் எல்லாம் வந்தே இருக்காது” என ரசிகர் சொல்ல, அதற்கு பதிலளித்துள்ள இயக்குனர்  S.J.சூர்யா ,

அப்படியெல்லாம் இல்ல

மனசு வலியில ரெண்டு பேரும் ஃபோன தொலைச்சிட்டதா காட்டினா...போச்சு... 

ஃபிரன்ட்சுக்கு மாறி மாறி ஃபோன் பண்ணா... 

அவங்களும் சிவா ஸ்டேஷனுக்கு போயிட்டு இருக்கான்... 

ஜெனி ஸ்டேஷனுக்கு போயிட்டு இருக்கா... அப்படின்னு சொன்னா அவ்வளவுதான். 

எது கிளைமாக்ஸோ அதுக்கு தகுந்த மாதிரி காட்சிகளை அமைக்கணும் அவ்வளவுதான்.

என தெரிவித்திருந்தார் . இவ்வாறு ரசிகர்களின் கேள்விகளுக்கு மதித்து பதிலளிக்கும் இயக்குனர்  S.J.சூர்யாவின் குணத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.