தமிழில் இயக்குனர் சமுத்திரகனியின் இயக்கத்தில் இயக்குனர் சசிகுமார், விஜய் வசந்த், அனன்யா, கஞ்சாகருப்பு ஆகியோர் நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் நாடோடிகள். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சாந்தினிக்கு முன்னாள் தமிழக அமைச்சர் மணிகண்டன் மிரட்டல் விடுப்பதாக தற்போது புகார் எழுந்தது. 

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிகை சாந்தினியை காதலிப்பதாக பழகி வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை அளித்துள்ளார். இதனால் நடிகை சாந்தினியும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில் இப்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார். மேலும் அடியாட்களை வைத்து தன்னையும் தன் குடும்பத்தையும் மிரட்டுவதாகவும் சென்னை காவல் ஆணையரிடம்  நடிகை சாந்தினி புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகை சாந்தினி,முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உடனிருக்கும் புகைப்படங்களையும்  குறுந்தகவல்களையும் காட்டியுள்ளார்.முன்னாள்  அமைச்சர் மணிகண்டன் நெருக்கமாக பழகி வந்த நேரத்தில் நடிகை சாந்தினிக்கு தெரியாமல்  எடுக்கப்பட்ட நடிகை சாந்தினியின் நிர்வாண ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் நடிகை சாந்தினி முன்னாள்  அமைச்சர் மணிகண்டன்  மீது புகார் அளித்துள்ளது  தமிழகத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.