உலகம் முழுவதும் கொரானாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது கொரானா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள்  உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கிறது. ஒவ்வொரு அரசாங்கமும் பொதுமக்களை தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது. 

actor atharva tested negative for covid 19உலகளவில் பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும்  நடிகர் அதர்வா சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிப்புக்குள்ளானார். சில மிதமான  அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார் .அதில்  அவருக்குக் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனையின்படி அவரது வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். 

இந்த நிலையில்  நேற்று மீண்டும்  கொரோனா பரிசோதனை செய்து கொண்டார் அதர்வா. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதை அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 

“என்னுடைய covid-19 பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வந்திருக்கிறது. உங்கள் அனைவரின் அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கு மிக்க நன்றி இப்போது நான் மிகவும் நலமுடன் இருக்கிறேன். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன் அனைவரும் உங்கள் உடல்நலனை பார்த்துக் கொள்ளுங்கள் பாதுகாப்பாக இருங்கள்” 

என்று பதிவிட்டுள்ளார்

இரண்டாம் அலையின் தீவிரத்தில் நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக் கொண்டே வருவதால் மருத்துவமனைகளின் படுக்கை வசதியும் ஆக்சிஜன்  வசதியும் போதிய அளவில் கிடைக்காமல்  இருக்கிறது. இந்த சவாலான காலகட்டத்தில் மத்திய அரசும் மாநில அரசுகளும் இரவு பகல் பாராமல் உழைத்து  மக்களைப் பாதுகாத்து வருகிறது.