அடடே இந்த பாட்டை செமயா பாடுறாரே தளபதி...வைரல் வீடியோ !
By Aravind Selvam | Galatta | November 02, 2020 14:13 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.இவரது பிறந்தநாளுக்கும் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக ட்ரெண்ட் அடித்தன.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவரை பற்றி என்ன தகவல் வந்தாலும் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி விடும்.தற்போது விஜயின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல டிவி ஒன்றிற்கு சில வருடங்களுக்கு முன் பேட்டியளித்த தளபதி விஜய்.அந்த நிகழ்ச்சியில் தேவர்மகன் படத்தின் சூப்பர்ஹிட் பாடலான இஞ்சி இடுப்பழகி பாடலை பாடி அசத்தியிருப்பார்.இந்த வீடீயோவை தற்போது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Rare video of Thalapathy Vijay singing 'Inji idupazhaga' song❤️ Thalaivan voice 👌🤩#Master || @actorvijay 👑 pic.twitter.com/yMECesPsLh
— C r a z y_B o y (@Crazy_boy_64) October 31, 2020
Bigg Boss Balaji met with an accident due to drunk and drive? Unknown incident!
02/11/2020 01:31 PM
Bigg Boss 4 Tamil - Controversial Promo | Balaji angry after Sanam kicks him!
02/11/2020 12:09 PM
Director Bala's unseen video from work! Don't miss!
01/11/2020 06:00 PM