தாறுமாறாக தொடங்கியது தளபதி 65 ஷூட்டிங் ! உற்சாகத்தில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | April 09, 2021 17:13 PM IST
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.இவரது பிகில் படம் கடந்த 2019 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.பொங்கலை முன்னிட்டு இந்த படம் இன்று மிக பிரம்மாண்டமாக கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..
இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக தளபதி விஜய் சில நாட்களுக்கு முன் வெளிநாடு சென்றார்.தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு Gerogiaவில் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இதனை தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
#Thalapathy65 shooting has started in Georgia! @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja pic.twitter.com/tuMnc5393k
— Sun Pictures (@sunpictures) April 9, 2021
Star India Network launches new campaign to create awareness among the viewers!
09/04/2021 05:38 PM
Surprise release - New picture from Thalapathy 65 | Vera Level Treat for fans!
09/04/2021 05:15 PM
WOW: Karthi officially confirms his next film with this superhit director!
09/04/2021 04:27 PM