கடந்த 2017-ம் ஆண்டு மலையாள திரையுலகில் நடிகையாக களமிறங்கியவர் ஐஸ்வர்யா லட்சுமி. 2019-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் ஜோடியாக  நடித்துள்ளார். இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. 

தற்போது நடிகை ஐஸ்வர்ய லட்சுமிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறிய அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு பாசிடிவ் என வந்துள்ளதாம். இதுபற்றி அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கை முறைகளையும் அவர் எடுத்துள்ளார்

சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் ஐஸ்வர்யாவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்பட வாய்ப்பும் கிடைத்தது. படத்தில் நடிக்க ஐஸ்வர்யா லட்சுமிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். ஐஸ்வர்யா இந்த படத்தில் பூங்குழலி என்ற கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து இருந்து வருகிறது. அதிலும் சினிமா பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

அதே சமயத்தில், இந்த நடிகைக்கு கொரோனா, மருத்துவமனையில் அனுமதி என்ற தவறான செய்திகளையும் காண முடிகிறது. நேற்று நடிகை அஞ்சலி இதுகுறித்து தெளிவு செய்தார். இன்று காலை முன்னணி நடிகை ராதிகா சரத்குமார் தான் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Lekshmi (@aishu__)