கன்னட திரையுலக நடிகையும், எழுத்தாளருமான சைத்ரா கோட்டூர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் கலந்து கொண்டவர். கோலாரில் வசித்து வரும் சைத்ரா, தன் வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் கன்னட திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அவரை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றிவிட்டனர். தற்போது அவரின் நிலைமை சீராக இருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொழில் அதிபர் நாகர்ஜுனா என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தார் சைத்ரா. இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி கோவிலில் வைத்து சைத்ரா, நாகர்ஜுனாவின் திருமணம் நடந்தது. அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.

அந்த திருமணத்தில் சைத்ராவின் குடும்பத்தார் மட்டுமே கலந்து கொண்டனர். நாகர்ஜுனாவின் குடும்பத்தாருக்கு அந்த திருமணம் பிடிக்கவில்லை. நாகர்ஜுனாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் சைத்ரா என்று மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்துள்ளனர்.

சைத்ராவை நாகர்ஜுனா குடும்பத்தார் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் சைத்ராவை மிரட்டவும் செய்தார்களாம். இதனால் தான் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. கோலாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சைத்ரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திரைப்பிரபலங்கள் இப்படி தவறான முடிவுகளை எடுப்பது நியாயமா ? என்று கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள்.