தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் தல அஜித். நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். ஆளில்லா ட்ரோன் விமானங்களை இயக்குவதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம். அதனால் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.

கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியிருந்தார்.அடுத்ததாக வலிமை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தல அஜித்.இந்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைப்பட்டுள்ளது.

பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளிநாட்டில் படமாக்கப்படவேண்டிய ஒரு சண்டைக்காட்சி மட்டுமே மீதமுள்ளது,லாக்டவுன் முடிவடைந்த பின் இந்த காட்சி படமாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்,மேலும் டப்பிங் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன மேலும் சில போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் முடிந்து படம் கூடிய விரைவில் ரிலீசிற்கு தயாராகும் என்றும் தெரிவித்துள்ளார்.படம் குறித்த சுவாரசிய அப்டேட்கள் கிடைத்ததை அடுத்து அஜித் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.