தமிழ் திரையுலகில் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அசோக்செல்வன் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த சூது கவ்வும் திரைப்படத்தின் மூலம்  நடிகராக அறிமுகமானார். இவர் நடித்த “தெகிடி”  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. உனக்கு தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்து வரும் அசோக்செல்வன் கடைசியாக நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி  ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அடுத்ததாக நடிகர் அசோக் செல்வன் பிரபல தெலுங்கு இயக்குனர் Ani.I.V.சசி இயக்கத்தில்  நடித்த “நிண்ணிலா நிண்ணிலா” திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.  “நிண்ணிலா நிண்ணிலா” திரைப்படம் தமிழில்  தீனி என்ற பெயரில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் அசோக்செல்வன் உடன் இணைந்து நடிகைகள் ரித்து வர்மா மற்றும்  நித்யா மேனன் நடித்துள்ள இத்திரைப்படம் ZEE 5 OTT தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

இந்நிலையில் இயக்குனர் Ani.I.V.சசி இயக்கிய “மாயா” குறும்படத்தில் நடிகர் அசோக் செல்வனும் நடிகை ப்ரியா ஆனந்தும் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர்  Ani.I.V.சசி தயாரித்துள்ள  “மாயா”  குறும்படத்தை கௌதம் வாசுதேவ் மேனனின் ஒன்றாக நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பல தேசிய மற்றும் சர்வதேச குறும்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ள   “மாயா”  குறும்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது  “மாயா”  குறும்படம் யூடியூபில் வெளியாகியுள்ளது. அழகான காதல் குறும்படமாக வெளிவந்துள்ள “மாயா” குறும்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று  யூட்யூபில் வைரலாகி வருகிறது.