வைரலாகும் கோப்ரா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ! ஆச்சரியத்தில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | June 12, 2021 11:11 AM IST
A.R.முருகதாசின் உதவி இயக்குனராக இருந்து டிமாண்டி காலனி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அஜய் ஞானமுத்து.இந்த படம் மிக சிறந்த பேய் படம் என பலரது வரவேற்புகளை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் இயக்கிய இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா,அதர்வா,அனுராக் காஷ்யூப்,விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஹிப்ஹாப் தமிழா இசையமைத்த இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் கோப்ரா படத்தினை இயக்கிவந்தார்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ஆனந்த் ராஜ்,ரோபோ ஷங்கர்,மியா ஜார்ஜ்,மிர்னாலினி ரவி,பூவையார்,கே.எஸ்.ரவிக்குமா
நட்சத்திர கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிரச்செய்தது.சீயான் விக்ரம் பல வித்தியாச கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்த இந்த டீஸர் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வந்தது.
கொரோனா காரணமாக படத்தின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.தற்போது படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்துடன் நிலைமை விரைவில் சரியானதும் மீண்டும் ஷூட்டிங் செல்ல ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.இவர் பதிவுசெய்துள்ள புகைப்படத்தில் வித்தியாச கெட்டப்பில் சீயான் விக்ரம் இருப்பதால் இந்த புகைப்படம் வேற லெவலில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.
SAD: Popular actress' mother passes away - fans and celebrities in mourning!
12/06/2021 12:43 PM
Valimai new official update from Thala Ajith's manager - Big Breaking statement!
12/06/2021 11:26 AM