பொது இடங்களில் PM WANI என்ற பெயரில் மிகப்பெரிய வைஃபை சேவை வழங்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. ஒரு கோடி டேட்டா சென்டர்களை திறக்கப்பட இருக்கிறது மத்திய அரசு. இதற்காக நாடு முழுவதும் பொது தரவு மையங்கள் திறக்கப்படும். 


ஆத்மநிர்பர் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்திற்காக நடப்பாண்டுக்காக ரூ.1584 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், 2020 முதல் 2023 வரையிலான, முழு திட்ட காலத்திற்கு ரூ.22,810 கோடி ஒதுக்கப்படுவதாகவும், இந்த திட்டத்தின்முலம் சுமார் 58.5 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள் எனவும், 'பி.எம். வாணி' என்ற பெயரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்து இருக்கிறார்.


லட்சத் தீவுகளில் உள்ள 11 தீவுகளுக்கும் அதிவேக இணைய சேவை வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில், கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கம்பி வடம் (ஆப்டிகல் ஃபைபா்) பதிக்கும் திட்டத்துக்கும் ஒப்பதல் வழங்கப்பட்டு இருக்கிறது. 


 மேலும்  தகவல் பரிமாற்றம் மற்றும் நிதிச் சந்தை ஒழுங்குமுறை சட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் பெற வழி செய்யும் வகையில் லக்ஸெம்பா்க் நாட்டின் நிதி ஆணையத்துடன் (சிஎஸ்எஸ்எஃப்) புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான இந்திய பங்கு மற்றும் பரிவா்த்தனை (செபி) வாரியத்தின் முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.


கொரோனா பாதிப்புகளால் ஏற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான ஏபிஆா்ஒய் திட்டத்துக்கும் மத்திய அரசு ஒப்பதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் கூறியிருக்கிறார்.