தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இவர் நடித்த ஹீரோ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சிவகார்த்திகேயன்.அடுத்ததாக புதுமுக இயக்குனர் சிபி இயக்கத்தில் தயாராகி வரும் டான் படத்தில் நடித்து வந்தார் இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தடைபட்டுள்ளது.இவர் நடித்துள்ள டாக்டர் படம் ரம்ஜான் அன்று வெளியாகவிருந்தது ஆனால் தற்போது நிலவி வரும் சூழல் காரணமாக தள்ளிப்போனது.

சினிமா மட்டுமின்றி சமூகஅக்கறை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.பல முக்கிய நிகழ்வுகளுக்கும்,பிரச்சனைகளுக்கு தனது கருத்தை எப்போதும் தெரிவித்துள்ளார்.தற்போது நிலவி வரும் கடினமான சூழல் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையிலும்,மக்கள் எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் சிவகார்த்திகேயன் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார்.