இந்திய சினிமாவில் வில்லன் நடிகர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அப்படிப்பட்ட  வில்லன் நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகர் என்றால் அது நம் பொன்னம்பலம் தான். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அபூர்வசகோதரர்கள் மைக்கேல் மதனகாமராஜன், விஜயகாந்தின் மாநகர காவல்,ஹானஸ்ட் ராஜ், சத்யராஜின் வால்டர் வெற்றிவேல், ஏர்போர்ட்  சரத்குமார் நடித்த வேடன் மற்றும் நாட்டாமை போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ்  சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வளர்ந்தார் பொன்னம்பலம். 

கஷ்டத்தில் இருக்கும் கலைஞர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்ட நடிகர் சிரஞ்சீவி இந்த வருடம் நலிவடைந்த கலைஞர்களுக்கு 15 லட்ச ரூபாய் நிதி உதவி செய்வதாக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்கட்டமாக தெலுங்கில் நலிவடைந்த சில கலைஞர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் நிதி உதவி செய்துள்ள நடிகர் சிரஞ்சீவி தற்போது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகர் பொன்னம்பலத்திற்கு நிதி உதவி செய்துள்ளது பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

actor chiranjeevi helps actor ponnambalam for kidney transplantation

சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்ட நடிகர் பொன்னம்பலத்திற்கு  தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி 2 லட்ச ரூபாய் நிதி உதவி செய்துள்ளார். நடிகர் சிரஞ்சீவி அளித்த 2 லட்ச ரூபாய் நிதி உதவிக்கு  நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ள நடிகர் பொன்னம்பலம் அந்தப் பதிவில், 

“அண்ணன் சிரஞ்சீவிக்கு எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் இந்த உதவியை நான் என் உயிருள்ளவரை மறக்கமாட்டேன் நீங்கள் ஆஞ்சநேயரைப் போல சிரஞ்சீவியாக எப்போதும் நலமோடு இருப்பீர்கள்” 

என்று நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் இந்த மோசமான பேரிடர் காலத்தில் ஆக்சிஜன்  தட்டுப்பாடால் அவதிப்படும் மக்களுக்காக நடிகர் சிரஞ்சீவி ஆக்சிஜன் பேங்க் ஆரம்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.