தமிழ் சினிமாவில்  தனக்கென ஒரு தனி பாணியில் திரைப்படங்களை எடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளமே வைத்திருக்கக்கூடிய ஒரு  இயக்குனர் செல்வராகவன். 2002 ஆம் ஆண்டு வெளிவந்த துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான செல்வராகவன், தொடர்ந்து காதல் கொண்டேன் ,7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்துள்ளார். மிக மிக எதார்த்தமான காட்சி அமைப்புகள்  ஒரு புது அனுபவத்தை கொடுக்கக்கூடிய திரைக்கதை என அனைத்திலும் செல்வராகவன் ஒரு மாஸ்டர் தான். இவருடைய திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பு அவர்கள் பேசும் வசனங்கள் என அனைத்திலும் செல்வாவின் டச் இருக்கும் . 

selvaragavan nenjam marapathillai premires in zee 5 premium on may 14 onwards 

கடந்த 2016ஆம் ஆண்டு SJ சூர்யாவின் நடிப்பில் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகியது. நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம். பின்பு சில காரணங்களால் அந்தப் படம்  வெளியாகாமல் இருந்தது இந்நிலையில் இந்த திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் செல்வராகவனின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது .

 

SJ சூர்யாவின் நடிப்பும் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையும் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த திரைப்படம் இப்போது ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. பிரபல ஓடிடி தளங்களில் ஒன்றான ZEE 5 பிரிமியம் ஓடிடி தளத்தில் மே 14-ஆம் தேதி முதல் இது  ஒளிபரப்பாக உள்ளது.அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம்  படப்பிடிப்பு  விரைவில் தொடங்க உள்ளது சமீபத்தில் நானே வருவேன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.