கடந்த 55 ஆண்டுகளில் முதல் முறையாக டாக்டர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்களும் புரட்சித்தலைவி செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களும்  இல்லாத ஒரு தேர்தலை தமிழகம் சந்தித்திருக்கிறது.  திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக கூட்டணி திரு.எடப்பாடி.பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அதிமுக கூட்டணி  திரு.கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கூட்டணி மற்றும் திரு.சீமான் அவர்களின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டியாக நடந்தேறியது 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல். 

 

தனிப் பெரும்பான்மையோடு மாபெரும் வெற்றி பெற்றது திரு.மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி.  இன்று மாலை திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பொதுக் கூட்டத்திற்கு சற்று நேரம் முன்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள முக ஸ்டாலின் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று வாழ்த்தினார் மக்கள் நீதி மைய தலைவர் நடிகர் கமல்ஹாசன் அவர்கள்.   

kamalhassan meets new cm mk stalin

மலர் கொத்து கொடுத்து  திரு மு க ஸ்டாலின் அவர்களையும் தீர்வு உதயநிதி ஸ்டாலின் இணையும் மலர்கொத்து கொடுத்து வாழ்த்தினார் கமலஹாசன்.  திராவிட முன்னேற்றக் கழகத்தை  எதிர்த்து நின்று களம் கண்ட மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் ஸ்டாலின் அவர்களின் வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்து வாழ்த்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

 

தொடர்ந்து நடைபெற்ற திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் பொது கூட்டத்தில் ஒருமனதாக திரு மு க ஸ்டாலின் அவர்களை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது