வெப் சீரிஸ் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கப்பட்ட ஒரு வெப்சீரிஸ் என்றால் அது MONEY HEIST தான்.  காட்சிக்கு காட்சி பரபரப்பாகவும் த்ரில்லாகவும் இருக்கும் இந்த வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். 

முதலில் ஸ்பெயின் நாட்டில் உருவான MONEY HEIST முதல் பாகம் 2017-ம் ஆண்டு வெளியானது. அதன் மொத்த உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெற்று 2017ம் ஆண்டின் இறுதியில் வெளியிட்டது .22 எபிசோடுகள் கொண்ட அந்த முதல் பாகம் ரசிகர்களின் மனங்களை வேட்டையாடியது என்றே சொல்லலாம். அடுத்தடுத்து வெளிவந்த ஒவ்வொரு பாகங்களையும் ரசிகர்கள் கொண்டாடினர்.

money heist part 5 shoot wraps up 

வெப் சீரிஸ் பார்ப்பதற்கு எல்லாம் ஒரு பொறுமை வேண்டும் வெப் சீரிஸ் என்றாலே முகம் சுளிக்கும் படியான சில காட்சிகள் இருக்கும் என பொதுவாக இருந்த கருத்துக்களை எல்லாம் தவிடுபொடியாக்கி ரசிகர்களின் மனம் ஈர்த்த வெப்சீரிஸ் என்றால் அது MONEY HEIST தான். ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையான ஒரு பிரம்மாண்டம் அதன் ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும். கடந்த 2020 ஆம் ஆண்டின் ஊரடங்கில் தான் இந்த MONEY HEIST வெப்சீரிஸ் மிகப்பெரிய பேசு பொருளாகவே மாறி இருக்கிறது. 

ஒரு மிகச் சிறந்த அறிவாளி எப்படி ஒரு வங்கியை கொள்ளை அடிக்கிறான் என்பதே இந்த வெப் சீரிஸ்-இன் மூலக்கதை.  வங்கிகளை கொள்ளை அடித்தது போலவே ரசிகர்களின் மனங்களையும் கொள்ளை அடிக்க தவறியதே இல்லை. இதுவரை நான்கு பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில் MONEY HEIST 5-ம் பாகம் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.