16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, 25 வயது இளைஞன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகில் உள்ள கிழ்ம‌லை கிராமம் கோம்பைக்காடு பகுதியைச் சேர்ந்த கருப்பன் என்பவரின் மகன் 25 வயதான முருகன், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்திருக்கிறான்.

இந்த பழக்கத்தில், அந்த சிறுமியிடம் தொடர்ந்து ஆசை வார்த்தைகள் கூறி, அந்த சிறுமியை மயக்கி அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விசயம், சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்த நிலையில், அவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். அத்துடன், அந்த இளைஞனை சிறுமியின் பெற்றோர் அழைத்து விசாரித்ததாகத் தெரிகிறது. அப்போது, அவர் சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் தங்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்து, தங்களையும் மிரட்டிய முருகன் மீது புகார் அளித்தனர்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட முருகனை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, முருகன் தன்னுடைய தவறை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து, முருகனிடம் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்ற போலீசார், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி, 25 வயது இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கொடைக்கானல் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், உத்தரப் பிரதேசம் மாநிலம் ஃபருகாபாத் மாவட்டத்தில் தனக்குப் பிடிக்காத ஒருவரைக் காதலித்த 15 வயதான மைனர் தங்கையை, 17 வயதான மைனர் சகோதரர் ஒருவர் கொலை செய்து உள்ளார். இந்த வழக்கில், அந்த சகோதரனை போலீசார் தற்போது அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.