தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்ப்பட்டாளத்தை கொண்டுள்ளவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண்.கடைசியாக 2018-ல் வெளியான Agnyaathavaasi படத்தில் நடித்திருந்தார்.இதனை அடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து ஜன சேனா பார்ட்டியில் முழுவதுமாக ஈடுபட்டுவருகிறார்.2019 லோக்சபா தேர்தலில் தனது ஜன சேனா கட்சி சார்பில் இரண்டு இடங்களில் போட்டியிட்டார்.

ஹிந்தியில் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் PINK.அமிதாப் பச்சன்,டாப்சீ முன்னணி வேடங்களில் நடித்திருந்த இந்த படம் கடந்த ஆண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் தல அஜித்,ஷ்ரத்தா ஸ்ரீநாத்,வித்யா பாலன் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த பவன் கல்யாண் ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.நிவேதா தாமஸ்,அஞ்சலி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு வக்கீல் சாப் என்று பெயரிட்டுள்ளனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.பொதுவாக பெரிய ஹீரோ படங்களின் டீஸர்,ட்ரைலர் உள்ளிட்டவை வெளியானால் திரையரங்குகளில் திரையிடப்பட்டு ரசிகர்கள் கொண்டாடுவார்கள்,இந்த படத்திற்கும் இந்த கொண்டாட்டம் நடந்தது.

ஏராளமான ரசிகர்கள் கூட்டம் பவன் கல்யானை 3 வருடம் கழித்து காணவேண்டும் என்ற ஆர்வத்தில் ட்ரைலருக்கே குவிந்தனர்.உள்ளே செல்வதிலேயே தள்ளுமுள்ளு ஏற்பட திரையரங்கின் கண்ணாடி,நாற்காலிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியுள்ளனர்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.