தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா,ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் என்று நயன்தாரா அழைக்கப்படுவார்.கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா.பெரிய ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

இவரது படங்கள் முன்னணி ஹீரோ படங்களுக்கு நிகராக வசூலிலும் சாதனை படைக்கும்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து அசத்தி விட்டார் நயன்தாரா.அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து அசத்தி உள்ளார் நயன்தாரா.

இவர் அம்மனாக நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் OTT-யில் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது இதனை தொடர்ந்து அண்ணாத்த,காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார் நயன்தாரா.இவரது நெற்றிக்கண்,நிழல் உள்ளிட்ட சில படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.

இவர் மலையாளத்தில் நடித்துள்ள நிழல் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்