தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது படங்கள் வெளியானாலே திரையரங்கங்கள் திருவிழாவாக காட்சியளிக்கும்.இவரது பிகில் படம் கடந்த 2019 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.பொங்கலை முன்னிட்டு இந்த படம் இன்று மிக பிரம்மாண்டமாக கொரோனவை அடுத்து முதல் பெரிய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தினை லோகேஷ் கனகராஜ்,வெற்றிமாறன் உள்ளிட்டோர் இயக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தளபதியை ஹீரோவாக வைத்து ஒரு பிரம்மாண்ட படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார் என்றும் இந்த படத்தின் இயக்குனராக கே.ஜி.எப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இருப்பார் என்றும் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.இந்த படம் தளபதி 67 அல்லது 68ஆக இருக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.இது எந்த அளவு உண்மை என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.