தமிழ் திரையுலகில் பிஸியான ஹீரோக்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்த லாக்டவுனில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து ஒரு குட்டி லவ் ஸ்டோரி படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை டாப்ஸி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். 

விஜய்சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் கா.பெ. ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக முக்கிய ரோலில் நடித்துள்ளார். விருமாண்டி இயக்கிய இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணியான போஸ்ட் ப்ரோடக்ஷன் பணியும் நிறைவடைந்தது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 

வேல.ராமமூர்த்தி, ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை பார்த்துவிட்டு இசையமைப்பாளர் ஜிப்ரான் பாராட்டி பதிவு செய்திருந்தார். பின்னணி இசைக்கான பணிகளை முடித்தார். அறம் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் இது. இதில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும் புகழாரம் சூட்டினார். 

இந்த படத்தில் விஜய் சேதுபதி சமுதாயத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நபராக நடித்திருக்கிறார். குறிப்பாக தண்ணீரை வியாபாரம் ஆக்கிய சிலருக்கு எதிராக அவர் போராட்டம் நடத்துவது போல படத்தின் டிரைலரில் காட்டப்பட்டிருந்தது. 

சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் இருந்து முதல் பாடலான அழகிய சிறுக்கி பாடலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. டி சீரிஸ் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த லிரிக்கல் வீடியோவுக்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அழகிய சிறுக்கி பாடலுக்கு வைரமுத்து வரிகள் எழுத கோல்ட் தேவராஜ் என்பவர் பாடியிருந்தார். 

க/பெ ரணசிங்கம் படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் சூழ்நிலையில் தியேட்டர்கள் தற்போது மூடப்பட்டு இருப்பதால், இதனை Zeeplex தளத்தில் வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். அக்டோபர் 2-ம் தேதி முதல் உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகும். கடந்த வாரம் இரண்டாம் பாடலான புன்னகையே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. சுந்தரய்யர் பாடிய இந்த பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடல் இசை பிரியர்களை ஈர்த்து வருகிறது. 

இந்நிலையில் படத்தின் மூன்றாம் பாடல் நாளை வெளியாகிறது என்ற அப்டேட் கிடைத்துள்ளது. பறவைகளா எனும் பெயரிடப்பட்ட இந்த பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். மணிகண்டன் பாடியுள்ளார். நாளை மாலை 5 மணியளவில் இந்த பாடல் வெளியாகவுள்ளது. இதனால் மிகுந்த ஆவலில் உள்ளனர் இசை விரும்பிகள் மற்றும் ஜிப்ரான் ரசிகர்கள்.