தென்காசி அருகே பள்ளி மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை ஆசையான வார்த்தைகளைக் கூறி, இளைஞன் ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்ததால், பிளஸ்-1 மாணவி கர்ப்பம் அடைந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்து உள்ள புளியாரையை தெற்குமேடு பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் 19 வயதான ரஞ்சித், அதே பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 

இப்படி வேலைக்கு செல்லாத நாட்களில் அந்த பகுதியில் ஊர் சுற்றி வந்த ரஞ்சித், அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1  படித்து வரும் 16 வயதான மாணவியை காதலிப்பதாக பின் தொடர்ந்திருக்கிறார். 

அந்த இளைஞனின் தொடர் விடாமுயற்சியில், அந்த சிறுமியும் காதலில் தடுக்கி விழுந்து உள்ளார். இதனால், அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் அடிக்கடி தங்கள் இருவரின் வீட்டிற்குத் தெரியாமல் அவ்வப்போது தனியாகச் சந்தித்துப் பேசி தங்களது காதலை மேலும் வளர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இப்படி, காதல் என்ற பெயரில், அந்த சிறுமியிடம் நெருங்கிப் பழகி வந்த ரஞ்சித், அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை ஆசையான பல வார்த்தைகளை அள்ளி வீசி, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதில், அந்த மாணவியும் கர்ப்பம் அடைந்துள்ளார். 

அந்த மாணவியின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டதை அந்த மாணவியின் தயார் கவனித்து உள்ளார். இதனால், சந்தேகப்பட்டு, தன் மகளிடம் அவர் விசாரித்து உள்ளார்.

அப்போது, அந்த மாணவி சாரியாகப் பதில் சொல்லாமல் சமாளித்து உள்ளார். இதனால், இன்னும் சந்தேகம் அதிகரிக்கவே, தன் மகளை தனியாக அழைத்துச் சென்று தீர விசாரித்து உள்ளார். அப்போது, ரஞ்சித்தின் காதல் விவகாரம் தெரிய வந்தது. அத்துடன், காதலன் ரஞ்சித் “என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, என்னிடம் தனிமையில் இருந்தான் என்றும், அதனால் நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்” என்றும், அந்த சிறுமி தன் தாயாரிடம் கூறியதாகத் தெரிகிறது.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவரது தாயார், அங்கேயே கதறி அழுது உள்ளார். இதனையடுத்து, ரஞ்சித் மீது சிறுமியும், சிறுமியின் தயாரும் 
அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த சிறுமிக்கு இன்னும் 18 வயது பூர்த்தி ஆகாத நிலையில், இதனை பாலியல் பலாத்கார வழக்காகப் பதிவு செய்த போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தை அதிரடியாகக் கைது செய்தனர். பிறகு, அவனிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அந்த சிறுமியை பலாத்காரம் செய்ததை அவன் ஒப்புக்கொண்டான். இதனையடுத்து, அவனை போலீசார் சிறையில் அடைத்தனர். 

மேலும், அந்த சிறுமியை அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பட்டதாரி இளம் பெண்ணை கடத்தியதாகத் திருமணமான இளைஞரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.