ஆக்ஷன் படங்களுக்கு உலகளவில் பெயர்போன நடிகர்களில் ஒருவர் ஜாக்கி சான்.தனது விடாமுயற்ச்சியால் மாபெரும் சூப்பர்ஸ்டாராக உருவெடுத்த இவருக்கு உலகமெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.எவ்வளவு ரிஸ்க் ஆன ஸ்டண்ட் ஆக இருந்தாலும் அசால்டாக செய்து அசத்துவார் ஜாக்கி சான்.

Vanguard என்று பெயரிடப்பட்டுள்ள இவரது படம் இந்த வருட தொடக்கத்தில் வெளியாகவிருந்தது.ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இந்த படம் ரிலீசானது.

ரிலீசானது முதல் வசூல் வேட்டை நடத்தி,விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இந்த படம்.தொடர்ந்து உலகம் முழுவதும் திரையரங்குகள் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்தனர்.

இந்த படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது , இதனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் தமிழில் தற்போது வெளியாகியுள்ளது.அதிரடியான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்