கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர்.

குறிப்பாக இவர்களது சீரியல்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.திருமணம்,உயிரே,ஓவியா,அம்மன்,இதயத்தை திருடாதே,மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.சமீபத்தில் இவர்களது சூப்பர்ஹிட் தொடரான திருமணம் தொடர் நிறைவுக்கு வந்தது.

மற்ற தொடர்கள் விறுவிறுப்பாக தங்கள் ஒளிபரப்பை தொடர்ந்து வருகின்றனர்.தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று வரும் தொடர் இதயத்தை திருடாதே.இந்த தொடருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

நவீன் இந்த தொடரின் நாயகனாகவும்,ஹிமா பிந்து இந்த தொடரின் நாயகியாகவும் நடித்து அசத்தி வருகின்றனர்.இந்த தொடரில் இவர்களது ஜோடி ரசிகர்கள் மிகவும் ரசிக்கப்பட்டு வருகிறது.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நவீன் ஹிமாவிற்கு ப்ரொபோஸ் செய்துள்ளார்.இந்த வீடியோ செம வைரலாகி வருகிறது.இந்த நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாகவுள்ளது,இது உண்மையான ப்ரொப்போசலா அல்லது நிகழ்ச்சிக்காக பண்ணப்பட்டதா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.