நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது வலிமை. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

வலிமை தொடர்பான தகவல்களை படக்குழு எப்போது வெளியிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். எனவே இந்திய பிரதமர் தொடங்கி அனைவரிடமும் அப்டேட் கேட்டு சொல்லுமாறு கோரிக்கை வைத்தனர். இதைப்பார்த்த நடிகர் அஜித், சிலர் செய்து வரும் செயல்கள் தன்னை வருத்தமடைய செய்வதாகவும், அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதுவரை பொறுமை காத்திருங்கள் என்று அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் அப்டேட் கேட்க, எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. ஒரு வேலை எனக்கு தெரிந்தால் சொல்கிறேன் என்று தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பதிலளித்துள்ளார் ஷிவாங்கி. 

வலிமை படத்தின் முதல் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருப்பதாகவும், இந்தப் பாடல் துள்ளலிசை பாடலாக வந்திருப்பதாகவும் ஏற்கெனவே இசையமைப்பாளர் யுவன் தெரிவித்திருந்தார். அதேபோல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த சில நாட்களுக்கு முன் ட்வீட் செய்திருந்தார்.

ஷிவாங்கி தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார். சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 19-வது படமாக உருவாகும் இப்படத்தை லைகா ப்ரோடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன், சிவகார்த்திகேயன் ப்ரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். நடிகர்கள் எஸ்.ஜே சூர்யா, சூரி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 𝙎𝙞𝙫𝙖𝙖𝙣𝙜𝙞 (@princess_sivaangi)