நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மக்களை திக்குமுக்காட வைத்தது. திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிலர் உயிர் இழந்தது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

தமிழில் இயக்குனர் கே.வி.ஆனந்த், இயக்குனர் தாமிரா, நகைச்சுவை நடிகர் பாண்டு, துணை நடிகர்களான மாறன் மற்றும் நித்திஷ் வீரா உள்ளிட்ட திரை பிரபலங்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அந்த வகையில் தற்போது மேலும் ஒரு இயக்குனர் தனது முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக குர்ஆனோ வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மலையாள திரை உலகில் பல திரைப்படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் பி.சேது ராஜனின் முதல் திரைப்படமாக  ’என்டே பிரியதாமம்’ திரைப்படம்  தயாராகி வந்தது.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரான ’என்டே பிரியதாமம்’ திரைப்படம்  பைனான்ஸ் பிரச்சனை காரணமாகவும் கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதாலும் ரிலீஸ் தள்ளிப்போனது. 

இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்த இயக்குனர் பி.சேதுராஜன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இவர் இயக்கிய ’என்டே பிரியதாமம்’ திரைப்படம்  திரைக்கு வருவதற்கு முன்பாகவே சேதுராஜன் உயிரிழந்திருப்பது படக்குழுவினர் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் சேதுராமனின் மறைவுக்கு மலையாள திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.