தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று அபியும் நானும்,வித்யா மோகன் மற்றும் அரவிந்த் ஆகாஷ் இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வருகின்றனர்.ரியா மனோஜ் மற்றும் நிதிஷ் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கி வருகின்றனர்.இவர்களை தவிர லதா,அகிலா,ஷியாம்,ராஜ்கமல் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார்,இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் இந்த தொடரின் ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்