தமிழ் திரையுலகில் தன்னிகரில்லா நாயகர்களில் ஒருவர் தல அஜித். நடிப்பு மட்டுமின்றி கேமரா, சமையல், கார், பைக் ரேஸ் போன்றவற்றில் அதிகம் ஆர்வமுடையவர். ஆளில்லா ட்ரோன் விமானங்களை இயக்குவதிலும் அஜித்திற்கு ஆர்வம் அதிகம். அதனால் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் தலைமை ஹெலிகாப்டர் ஆலோசகராகவும் பதவி வகித்தார்.

கடைசியாக நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க எச்.வினோத் இயக்கியிருந்தார்.அடுத்ததாக வலிமை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் தல அஜித்.இந்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார்,போனி கபூர் தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.ஹுமா குரேஷி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.பெரிதாக எதுவும் அப்டேட் கிடைக்காமல் தல ரசிகர்கள் தவித்து வந்தனர்.படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு பின் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 700 நாட்கள் எங்கு சென்றாலும் வலிமை அப்டேட் என பலரிடம் கேட்டு வந்த அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக படக்குழுவினர் தற்போது படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளனர்,யுவன் ஷங்கர் ராஜாவின் அசத்தலான மியூஸிக்கில் அஜித்தின் சூப்பர் மாஸ் புகைப்படங்கள் அடங்கிய இந்த மோஷன் போஸ்டர் செம வைரலாகி வருகிறது.