20 வயது இளம் பெண்ணுக்கு மது கலந்த குளிர்பானம் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த 55 வயது முதியவர், அந்த பெண்ணிற்குத் திருமணம் ஆகியும் விடாமல் தொடர்ந்து பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களில் வழக்கமாக நடைபெறும் இது போன்ற சம்பவம், இந்த முறை தமிழ்நாட்டில் அதுவும் திருவண்ணாமலையில் தான் அரங்கேறி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தேவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான சேட்டு என்பவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 
மகள்கள் உள்ளனர். 

55 வயதான சேக், கடந்த ஆண்டு மிகவும் தனிமையில் தவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அதாவது கொரோனா காலம் முடிந்த டிசம்பர் மாதத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஒருவருடன் அவர் அறிமுகம் ஆகி உள்ளார்.

பிறகு, அந்த இளம் பெண்ணுடன் தினமும் பேசி பழகி வந்த 55 வயதான சேட்டு, அந்த இளம் பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அப்போது, அந்த 20 வயதான இளம் பெண் மீது சபலப்பட்ட அந்த 55 வயதான சேட்டு, அந்த இளம் பெண் வீட்டில் தனியாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, மது கலந்த குளிர்பானத்தை எடுத்துக்கொண்டு, அந்த இளம் பெண்ணிடம் கொடுத்திருக்கிறார்.

அதனை பெற்றுக்கொண்ட அந்த இளம் பெண், “குளிர் பானம்” தானே, என்று நினைத்து அதனை குடித்திருக்கிறார். அதனை குடித்த அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த பெண் போதையில் அங்கேயே மயங்கி உள்ளார். அப்போது, அந்த 20 வயது இளம் பெண்ணை, அந்த 55 வயது முதியவர், பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த இளம் பெண் போதையில் இருந்து எழுந்ததும், அந்த பெண்ணை மிரட்டிய சேட்டு, “இந்த பாலியல் சம்பவத்தை வெளியில் சொன்னால், உன்னை கொன்று விடுவேன்” என்று, மிரட்டி உள்ளார்.

மேலும், “உனக்கு திருமண ஏற்பாடு நடந்து வருவதை, அப்படியே நிறுத்தி விடுவேன் என்றும், உன் வீட்டிற்கு வரும் மாப்பிள்ளை வீட்டாரிடம் உன்னை பற்றி தவறாக சொல்லி விடுவேன்” என்றும், அந்த பெண்ணை அவர் மிரட்டி இருக்கிறார்.

இதனால், பயந்து போன அந்த இளம் பெண், தனக்கு நேர்ந்த பலாத்கார சம்பவம் பற்றி வெளியே யாரிடமும் எதுவும் கூறாமல் இருந்து வந்திருக்கிறார்.

அந்த பெண் அதன் பிறகு அமைதியாக இருந்ததை தனக்க சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த சேட்டு, அதன் பிறகு, இதனை சொல்லி சொல்லியே, 
அந்த பெண்ணை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். இதனால், இந்த பெண்ணும், மானத்திற்குப் பயந்து எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு வந்திருக்கிறார்.

இதனையடுத்து, அந்த பெண்ணுக்குக் கடந்த பிப்ரவரி மாதம் வேறு ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞனுடன் திருமணம் ஆனது. 

திருமணத்திற்குப் பிறகு கணவன் வீட்டிற்கு சென்ற அந்த இளம் பெண், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனது அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார்.

அப்போது, மீண்டும் அங்கு வந்த 55 வயதான சேட்டு, மீண்டும் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்து தனியாக வரச்சொல்லி அழைத்திருக்கிறார். இதற்கு அந்த பெண் மறுக்கவே, அந்த பெண்ணை அவர் மீண்டும் மிரட்டத் தொடங்கி உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இது பற்றி தன்னுடைய கணவன் மற்றும் பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவரும், அவரது பெற்றோரும் அங்குள்ள திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 55 வயதான சேட்டுவை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து, விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைத்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.