கட்டிலில் கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த கணவன், ஊரை கூட்டி அசிங்கப்படுத்தியதால், காதலி வீட்டிலேயே கள்ளக் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை கரும்பாலை பி.டி காலனியைச் சேர்ந்த 43 வயதான சிவசக்தி என்பவர், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சிவசக்திக்கு, 32 வயதான மனைவி சுப்புலட்சுமி மற்றுமு் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.

இப்படியான சூழ்நிலையில், கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு சண்டை வந்துகொண்டே இருந்து உள்ளது.

இதனால், சுப்புலட்சுமி அடிக்கடி தனது அம்மா வீட்டிற்குச் செல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அத்துடன், தனத குடும்பம் இருக்கும் மிகவும் வறுமையின் சூழலை புரிந்துகொண்டு, 32 வயதான சுப்புலட்சுமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். 

திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் சுப்புலட்சுமி பார்த்து வந்த போது, அங்கு மதுரையை சேர்ந்த 27 வயதான செல்வகுமார் என்ற இளைஞனுடன், அவரக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறியுள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இப்படியான சூழலில், கொரோனா தொற்று பரவியதன் காரணமாக, திருப்பூரில் வேலை பார்த்து வந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால், சுப்புலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை பி.டி. காலனியில் இருக்கும் தனது அம்மா வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

அதே போல், கள்ளக் காதலன் செல்வ குமாரும் சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். இவர்களின் கள்ளக் காதல் அங்கும் தொடர்ந்துள்ளது.
 
இந்த சூழலில், மனைவி சுப்புலட்சுமி மதுரையில் உள்ள அம்மா வீட்டிற்கு வந்ததை கேள்விப்பட்ட கணவன் சிவசக்தி, தனது மாமியார் வீட்டுக்கு சென்று “நாம், மீண்டும் சேர்ந்து வாழலாம்” என்று, தனது மனைவியை அழைத்திருக்கிறார். 

ஆனால், அவர் மனைவியோ, “நான் உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது” என்று, மறுத்துவிட்டார். இதனால், கடும் விரக்தி அடைந்த கணவன், விஷம் குடித்து தற்கொலை முயன்று உள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிபில் இருந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சில வாரங்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் இருந்து நேற்றைய தினம் வீடு திரும்ய கணவன், நேரமாக தனது மனைவியைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்று உள்ளார்.

அப்போது, அந்த வீடு உள் பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் சந்தேகப்பட்ட அந்த கணவன், வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்து உள்ளார்.

அப்போது, வீட்டில் உள்ள கட்டிலில் மனைவி சுப்புலட்சுமி உடன், செல்வக்குமார் என்பவர் உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்ததை அவர் நேரடியாக பார்த்து உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், கள்ளக் காதலர்கள் இருவரையும் ஊர் மக்கள் முன்னிலையில் நிறுத்த திட்டமிட்டார்.

அதன் படி, வீட்டின் கதவை தட்டி உள்ளார். இதனையடுத்து கிட்டதட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு அவர் வீட்டின் கதவைத் திறந்திருக்கிறார்.

அப்போது, வெளியே வந்த மனைவி சுப்புலட்சுமி, “நான் உன்னுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை. நீ, உன் போகலாம். என் வீட்டுக்குள் வரக்கூடாது” என்று, தடுத்திருக்கிறார். 

ஆனாலும், “நான் நான் குளித்து விட்டு சென்று விடுகிறேன்” என்று கூறிவிட்டு அவர் வீட்டுக்குள் சென்று பார்த்து உள்ளார். 

அப்போது, அந்த வீட்டின் பாத்ரூமில் செல்வகுமார் மறைந்து நின்று உள்ளார். இதனால், கடும் கோபம் அடைந்த கணவன் சிவசக்தி, வீட்டுக்கு வெளியே சென்று கதவை பூட்டிவிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து, அவர்கள் முன்பு தனது மனைவியையும், அந்த கள்ளக் காதலனையும் அசிங்கப் படுத்தி உள்ளார்.

இதனால், ரொம்பம் அசிங்கப்பட்ட கள்ளக் காதலன் செல்வகுமார், இந்த அசிங்கம் தாங்க முடியாமல், தனது கள்ளக் காதலி வீட்டில் அங்கேயே அப்போதே தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தான், இந்த கள்ளக் காதல் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.