பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான அட்லீ, கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என தளபதி விஜய்யை வைத்து இயக்கி தமிழின் முன்னணி இயக்குனரானார். இதுவரை நான்கு படங்களை இயக்கியுள்ள அட்லீ கமர்ஷியல் படங்களின் கிங் என்றே கூறலாம். 

தளபதி விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று தளபதி படங்களை இயக்கியவர் இயக்குனர் அட்லி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான பிகில் திரைப்படத்தில் பிகில், ராயப்பன் என்ற அதிரடி ஆட்டம் கண்டார் அட்லீ. 

அட்லீ அடுத்ததாக பாலிவுட்டின் கிங்கான் எனப்படும் ஷாருக்கான் உடன் பணிபுரியவுள்ளார். வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இப்படத்திற்கான படப்பிடிப்பை துவங்குகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், அட்லீ தற்போது மும்பையிலுள்ள பிரபல ஆலிம் ஹாக்கிம் பியூட்டி சலூனில் ஸ்பைக் கெட்டப்பில் ஹேர் ஸ்டைலை மாற்றி செம்ம ஸ்டைலாக மாறியுள்ளார். அட்லீயா இது ?.. ஆசம் அட்லி என்று நெட்டிசன்கள் இந்தப் புகைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

சாதிப்பதற்கு உருவம், அழகு, நிறம் போன்ற விஷயங்கள் எதுவும் தேவையில்லை. உழைப்பு மட்டும் இருந்தால் போதும் எந்த உயரத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதற்க்கு சிறந்த உதாரணம் நம் இயக்குனர் அட்லீ.