தமிழ் சின்னத்திரையின் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான தொகுப்பாளினிகளில் ஒருவர் தியா மேனன்.சன் மியூசிக் மற்றும் சன் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக கடந்த சில வருடங்களாக திகழ்ந்து வருகிறார் தியா.சன் மியூஸிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமான தியா பல ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார்.

தொடர்ந்து இவர் தொகுத்து வழங்கிய ஹே கிரேஸி கண்மணி தொடர் செம ஹிட் அடித்தது,இந்த தொடரின் ரீச் தியாவை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.இதனை அடுத்து பல சூப்பர்ஹிட் தொடர்களை தொகுத்து வழங்கினார் தியா.தியாவிற்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.தமிழின் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவராக மாறினார் தியா.

தொடர்ந்து சன் டிவியில் பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தினார் தியா.மேலும் பல விருது நிகழ்ச்சிகள்,திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள் என்று பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அசத்தியுள்ளார் தியா.இவருக்கு கடந்த 2016-ல் கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் தியா அவ்வப்போது,புகைப்படங்கள் வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை பதிவிட்டு வருவார் தியா.பல இடங்களுக்கு செல்லும் தியா அங்கிருந்து புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்வார்.தற்போது நீச்சல்குளத்தில் இருப்பது போல சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தியா.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.