கடந்த சில வருடங்களுக்கு முன் தங்கள் ஒளிபரப்பை தொடக்கி தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்த தொலைக்காட்சி கலர்ஸ் தமிழ்.தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் தமிழின் டாப் சேனல்களில் ஒன்றாக குறுகிய காலத்தில் உருவெடுத்தனர்.

குறிப்பாக இவர்களது சீரியல்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.திருமணம்,உயிரே,ஓவியா,அம்மன்,இதயத்தை திருடாதே,மாங்கல்ய சந்தோசம் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களுடன் கலர்ஸ் தமிழ் பட்டையை கிளப்பி வருகின்றனர்.சமீபத்தில் இவர்களது சூப்பர்ஹிட் தொடரான திருமணம் தொடர் நிறைவுக்கு வந்தது.

மற்ற தொடர்கள் விறுவிறுப்பாக தங்கள் ஒளிபரப்பை தொடர்ந்து வருகின்றனர்.ரசிகர்களுக்காக சீரியல்களிலும் அவ்வப்போது சில முக்கிய ஸ்பெஷல் என்ட்ரிகளை கலர்ஸ் தமிழ் கொண்டு வந்துள்ளனர்.ரோபோ ஷங்கர் சமீபத்தில் ஒரு தொடரில் வந்து சிறப்பித்துவிட்டு சென்றார்.

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு வாரம் சென்றுகொண்டிருக்கிறது,இதில் கலர்ஸ் தமிழின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றான உயிரே தொடரில் நடிகர் பாபி சிம்ஹா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாண்டியராஜன்,நடிகர் ராம்கி மூவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலர்ஸ் தமிழ் வெளியிட்டுள்ளனர்.

bobby simha special appearance in colors tamil uyire serial

bobby simha special appearance in colors tamil uyire serial