பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களாகவே ஷோ மிகவும் போர் அடிக்கும் வகையில் இருக்கிறது என்று தான் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த வாரம் வழங்கப்பட்ட லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கும் பாலாஜி முருகதாஸ் செய்த தவறால் தடம் மாறி போனது. அதனால் இந்த வாரம் லக்சுரி பட்ஜெட் பூஜ்யம் மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக அறிவித்தார். அதனால் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

லக்சுரி பட்ஜெட் இல்லாமல் குடும்பம் நடந்த முடியாது என சொல்லி அர்ச்சனா பிக் பாஸிடம் கெஞ்சினார். முடிவை மாற்றி 50 சதவீதம் ஆவது கொடுங்க என கேட்டார். வீட்டின் தலைவர் ஆரியும் மன்னிப்பு கேட்டார். அதே போல பாலாஜியும் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். அதன் பின் பாலாஜி செய்த தவறு பற்றி மொத்த போட்டியாளர்களும் விவாதம் நடத்திக் கொண்டிருந்ததும் காட்டப்பட்டு இருந்தது. கடந்த சீசன் போட்டியாளர்கள் தீபாவளி ஸ்பெஷலாக தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுடன் வீடியோ காலில் பேசினார்கள். 

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் அடுத்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு இன்று நடந்திருக்கிறது. அதன் ப்ரோமோ வீடியோ தற்போது வெளிவந்து இருக்கிறது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமானவர்களை அடுத்த வார தலைவராக நாமினேட் செய்திருக்கிறார்கள்.

சோம் சேகரை பாலாஜி முருகதாஸ் நாமினேட் செய்தார். ஷிவானி அனைவர் முன்பும் வந்து நிஷா அக்காவை நாமினேட் செய்வதாக தெரிவித்தார். அதன் பின் ஜித்தன் ரமேஷும் நிஷாவை நாமினேட் செய்வதாக கூறி இருந்தார். 

யாருக்கு அதிக வாக்குகள் கிடைத்தது? அடுத்த வார தலைவர் யார் என்பது இன்று இரவு ஷோ ஒளிபரப்பானால் தான் உறுதியாகும். தலைவர் ஆகும் போட்டியாளருக்கு அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.