8 குழந்தைகள் கொன்ற செவிலியர், மேலும் 10 குழந்தைகளை கொலை செய்ய முயன்ற சம்பவம், தாய்மார்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த உலகத்தில் செவிலியர்கள், கருணையின் மறு உருவமாகப் பார்க்கப்பட்டும், வர்ணிக்கப்பட்டும் வருகிறார்கள். ஆனால், அதற்கு எதிர் மறையான செயல் முறை ஒன்று மிகவும் கொடூரமான முறையில் அரங்கேறி இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இங்கிலாந்தின் ஹெர்போர்டு பகுதியைச் சேர்ந்த 30 வயதான லூசி லெட்பை, அங்குள்ள செஷயர் பகுதியில் அமைந்துள்ள செஸ்டர் மருத்துவமனையில்  செவிலியராக வேலை பார்த்து வந்தார். இந்த குறிப்பிட்ட மருத்துவமனையில், கடந்த 2015 ஆண்டு ஜூன் மாதம் முதல், 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலகட்டத்தில் அவர் பணியாற்றும் போது, சுமார் 15 பிஞ்சு குழந்தைகளின் மர்ம மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 

அந்த பிஞ்சு குழந்தைகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டு போலீசார் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையின் போது, சந்தேகத்தின் பேரில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதன் முறையாக செவிலியர் லூசி, கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, ஜாமீனிலும் அவர் வெளிவந்தார். 

ஆனால், கடந்த 2019 ஆண்டு ஜூன் மாதம், 8 குழந்தைகள் கொலை மற்றும் 6 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக மீண்டும் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கில், போலீஸ் காவலில் உள்ள செவிலியர் லூசி மீது தற்போது 10 குழந்தைகளை கொல்ல முயன்றதாக வழக்குப் தொடரப்பட்டு உள்ளது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இதே காலகட்டத்தில் குறிப்பிட்ட மருத்துவமனையில் மர்மமாக இறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் அங்குள்ள போலீசில் புகார் செய்து உள்ளனர். இது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்துள்ள அந்நாட்டு போலீசார், செவிலியர் லூசி லூசி லெட்பிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அந்நாட்டில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், தெற்கு ஆப்கானில் ஊடகவியலாளர் ஒருவர் வண்டியில் குண்டு வைத்து கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தெற்கு ஹெல்மண்ட் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஒமர் வாக் இது குறித்துப் பேசும் போது, “எல்யாஸ் டாயீ எனும் ஊடகவியலாளர் வண்டியில் வைத்த குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

இதில், “எல்யாஸின் சகோதரர், ஒரு குழந்தை மற்றும் வேறொருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்றும், அவர் தெரிவித்து உள்ளார். என தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், காபூலில் டோலோ தொலைக்காட்சி தொகுப்பாளர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மறு நாளே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக ஆப்கானிஸ்தானில் வன்முறை சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.