ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவு என தொடர்ந்து பிரச்சனையோடு பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 50-வது நாளை தொட்டு இருக்கிறது. காலை வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டின் பங்களிப்பு குறித்து கேட்டறிந்தார் கமல். 

மணிக்கூண்டு டாஸ்கில் வெற்றி பெற்ற அணிகளை கமல் பாராட்டினார். நேரத்தை கிட்டத்தட்ட துல்லியமாக கணித்த ரியோ அணிக்கு கமல் பாராட்டு தெரிவித்தார். மேலும் பாலாஜிக்கும் ஒரு அட்வைஸ் கூறினார் அவர். விதிகளை கடைபிடிக்கவேண்டும் என கமல் பாலாஜிக்கு அட்வைஸ் கொடுத்தார். கேம் ஸ்பிரிட்டை கெடுக்காமல் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வார நாமினேஷன் நடைபெற்று முடிந்தபிறகு காதல் கண்ணை மறைக்கிறது என்ற காரணத்தை பாலாஜி நாமினேட் செய்யப்பட்டதற்கான காரணத்தை அறிவித்தார். அதனால் பாலாஜி கோபமாக எதோ பேசினார். காதை கிழித்துவிடுவேன் என அவர் சொன்னதாக ரியோ கோபப்பட்டார். அவர் கோபத்தில் கதவை எட்டி உதைத்து சென்றதும் சர்ச்சை ஆனது. அது பற்றி பேசிய கமல் கோபம் காதை மறைத்துவிட்டது என தெரிவித்தார். மேலும் பாலாஜி தன் கோபத்தை கட்டுப்படுத்தியது பற்றி கமல் பாராட்டினார்.

இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவில் கமல் இது பற்றி பேசி இருக்கிறார். 50வது நாளை தொட்டு இருப்பதால் இந்த வீட்டிற்கு உங்கள் பங்களிப்பு என்ன என சொல்லுங்கள் என கமல் கேட்டார். அதனால் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து நின்று இது பற்றி பேசினர்.

முதல் ஆளாக பாலாஜி முருகதாஸ் வந்து பேச தொடங்கினர். ஒவ்வொருவருக்கும் ஒரு நிமிடம் மட்டுமே வழங்கப்படும் என கமல் கூறிய நிலையில் பாலாஜி மணிக்கூண்டு டாஸ்கில் எண்ணியது போல கமல் வேகமாக நொடிகளை எண்ணி அவரை கிண்டல் செய்தார்.

தற்போது வெளியான இரண்டாம் ப்ரோமோவில், சோம் சேகரை பாராட்டுகிறார் கமல் ஹாசன். பாக்ஸிங் ஸ்கில்ஸாக இருக்கட்டும், பேசும் போதாக இருக்கட்டும் என்னை சில விஷயங்கள் தடுக்கும் என்று கூறினார். இப்போவே நீங்க வெளியே சென்றாலும், வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்களை வெளியனுப்பிடுவார்கள் என்றும் நினைக்காதீர்கள் என்று சோம் சேகரை பாராட்டி பேசியுள்ளார் கமல். அருகில் உள்ள ரம்யா கைதட்டி உற்சாகம் செய்கிறார்.