கடந்த 2005-ம் ஆண்டு இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சானாகான். ஜீவா நடித்த ஈ படத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் தந்திருப்பார். 2008-ம் ஆண்டு வெளியான சிலம்பாட்டம் திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார். இதில் இவர் நடிப்பு பெரிதளவில் கவனிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பரத் நடித்த தம்பிக்கு இந்த ஊரு, ராதாமோகன் இயக்கத்தில் வெளியான பயணம் திரைப்படம், ஆயிரம் விளக்கு, ஒரு நடிகையின் கதை உட்பட சில பல படங்களில் நடித்தார்.

சமீபத்தில், விஷால் நடித்த அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார் சனாகான். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வந்த இவர், இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு உலகளவில் பிரபலமடைந்தார். அவர் நடன இயக்குனர் மெல்வின் லூயிஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். பின்னர் அவரை பிரிந்தார். 

மெல்வின் தனக்குத் துரோகம் செய்ததால், அவரை பிரிந்துவிட்டேன் என்று தெரிவித்தார் சனா கான். பிறகு இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறிகொண்டனர். இந்த விஷயம் பெரும் பரபரப்பானது. இதற்கிடையே, கடந்த மாதம் தான் சினிமாவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். சினிமா வாழ்க்கையை விட்டு விலகி, மனித குலத்துக்கு சேவை செய்ய விரும்புகிறேன். என்னை படைத்தவரின் ஆணைக்கு இணங்க இந்த சேவையை செய்ய விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளார் சனாகான். சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை அவர் திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் திருமணம் செய்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரும் சேர்ந்து கேக் வெட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

வெள்ளை உடையில் ஹிஜாப் அணிந்திருக்கும் சனா கான், கணவரின் கையை பிடித்தபடி மாடிப்படியில் இருந்து இறங்கி வருகிறார். எப்போது இந்த திருமணம் நடந்தது என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. சனா கானின் திடீர் திருமணம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nevanta (@nevantamedia)