விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளராகும்,சீரியல் நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்தார் கவின்.சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து Ekaa எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் லிப்ட் படத்தில் கவின் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.இவர் தற்போது அஸ்கு மாறோ என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்.இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.குக் வித் கோமாளி புகழ் இந்த பாடலை பாடியுள்ளார்.சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இந்த பாடலில் கவினுக்கு ஜோடியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார்.கல்யாண சமையல் சாதம் என்று வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வெகு விரைவில் அவதரித்தார்.சமீபத்தில் வெளியான சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.இந்த பாடலின் வீடியோ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.செம ஜாலியான இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த ப்ரோமோ வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்