“12 பேர், பல ஆண்டுகளாக பல வெளிநாடுகளுக்கெல்லாம் என்னை கூட்டிச் சென்று, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்” என்று, வாய்ப்புக்காக காத்திருந்த மாடலிங் பெண் பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் தொழில் நகரமான மும்பையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சிகரமான பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்தியாவிலேயே “இந்தி சினிமா” உலகமான பாலி வுட்டுதான், மிகவும் புகழ் பெற்றுத் திகழ்கிறது. அங்குதான், அதிகப்படியான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது. அந்த வகையில் இந்தி சினிமா உலகின் தலைமையிடமான மும்பையில், சினிமா மட்டும் இல்லாமல், மாடலிங் உள்ளிட்ட விதவிதமான வாய்ப்புகளும் கொட்டி கிடக்கிறது. 

அந்த வகையில், மும்பை நகரமான மாடலிங் துறைக்கு எப்போதும் கதவுகளைத் திறந்து வைத்துக்கொண்டே இருந்து வருகிறது.

அப்படியாக, மும்பையில் வசித்து வரும் பிரபல மாடலிங் பெண்ணும், பாடலாசிரியருமான 28 வயதான அபெர்னா துபே, பாலி வுட்டில் புகழ் பெற்றவராக, பலராலும் அறியப்பட்ட முகமாகத் திகழ்கிறார். 

அவர் தான், “12 பேர், பல ஆண்டுகளாக பல வெளிநாடுகளுக்கெல்லாம் என்னை கூட்டிச் சென்று, தொடர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்” என்ற பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்.

அந்த குற்றச்சாட்டின் படி, “பிரபல புகைப்படக் கலைஞர், எழுத்தாளர் உள்பட மிகவும் செல்வாக்குமிக்க 12 பேர், என்னைத் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்கள்” என்று, குறிப்பிட்டு சொல்லி உள்ளார்.

அத்துடன், “என்னை தொடர்ச்சியாக பலாத்காரம் செய்த செல்வாக்குமிக்க அந்த 12 பேர் மீதும், மும்பை போலீசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நான் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றும், அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

இப்படியாக, தொடர்ந்து 12 ஆண்டுகள் பலாத்காரத்திற்கு ஆளான மாடலிங் பெண்ணான அபெர்னா துபே, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தற்போது முயன்று வருவதால், அந்த 12 பேரில் ஒருவராக உள்ள குற்றம் சாட்டப்பட்டவரான ஷீல் குப்தா என்பவர், “வாட்ஸ்ஆப்பில் என்னை அழைத்து என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார்” என்றும், அபெர்னா துபே, குற்சாட்டி உள்ளார். 

“முக்கியமாக, பல வெளிநாடுகளில் இருந்து புதிது புதிதான நம்பரிலிருந்து எனக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகின்றன’ என்றும், அபெர்னா துபே வேதனை தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையில், அபெர்னா துபே அளித்துள்ள பாலியல் குற்றச்சாட்டில், “சம்மந்தப்பட்ட 12 பேரும், என்னை மும்பை உள்ளிட்டபல மாநிலங்கள் மற்றும் பல வெளிநாடுகளுக்கும் அழைத்துச் சென்று, என்னை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்” என்றும், புகாராக கூறியுள்ளார். 

குறிப்பாக, “அவர்கள் என்னை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று, கோகைன் உள்ளிட்ட போதைப் பொருட்களை கலந்து கொடுத்து, நான் மயங்கியதும் எனக்குத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் கொடுத்து வந்தனர் என்றும், இதனால் நான் மிகவும் மனச்சோர்வுக்கு ஆளாகி, கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டேன்” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார்.

மேலும், “என்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால், காவல் நிலையத்தில் என்னால் அந்த நேரத்தில் புகார் அளிக்க முடியவில்லை என்றும், அவர்கள் மிரட்டலுக்குப் பயந்தும், தொடர்ந்து எனக்கு வரும் வாய்ப்புகளுக்காகவும் தான் அப்போது நான் அமைதியாக இருந்தேன்” என்றும், பாதிக்கப்பட்ட பிரபல மாடலிங் பெண்ணான அபெர்னா துபே, வேதனையோடு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள மும்பை போலீசார், தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம், பாலி வுட்டில் மிகப் பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.