வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஸ்டாலின் அவர்களுக்கு, வேளாண் சட்டம் பற்றி எதுவும் தெரியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

வேளாண் சட்டம் மற்றும் விவசாயிகள் பிரச்சனைகள் தொடர்பாக பேசிய முதல்வர் பழனிசாமி, "நம் விவசாயிகள் விளைவித்த பயிர்களுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க வேண்டும். இது தான் நம்முடைய நோக்கம்." என்று கூறினார். இது குறித்து மேலும் பேசிய அவர்,
 "தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டால் முதலில் குரல் கொடுப்பது அதிமுக அரசு தான். பஞ்சாபில் நிறைய இடைதரர்கள் இருக்கிறார்கள், அவர்கள் விவசாயிகளிடமிருந்து வாங்கி வர்த்தர்களிடம் விற்பவர்கள். அதனால் அங்கு விவசாயிகள் போராடுகிறார்கள். பஞ்சாப் விவசாயிகளுக்காக தான் ஸ்டாலின் போராடுகிறார். எப்படியாவது விவசாயிகளை குழப்ப வேண்டும் அதன்மூலம் அவர்களது ஓட்டை வாங்கி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்" என்பர் கூறினார்