தஞ்சை மாவட்டத்தில் மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அந்த மாவட்டத்தில் மாணவர்களின் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 183 ஆக உயர்ந்து உள்ளது. 

தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. 

அதாவது, கடந்த சில மாதங்களாகத் தமிழகத்தில் கொரோனா பாதிப்ப எண்ணிக்கை 500 க்கும் குறைவாக காணப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக ஆயிரத்திற்கும் மேல் தொடர்ச்சியாகப் பாதிப்புக்கள் அதிகரித்தது காணப்படுகின்றன.

இதில், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கேவை, திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய 7மாவட்டங்களில் மிகத் தீவிரமாக கொரோனா வைரஸ் பரவிக்கொண்டு இருக்கின்றன.        

அதன் படி, கடந்த 11 நாட்களில் சென்னையில் புதிதாக 3,907 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1015 பேருக்கும், கோவையில் 886 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 637 பேருக்கும், தஞ்சை மாவட்டத்தில் 508 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 321 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 285 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அதே போல், கொரோனா பாதிப்பு தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை நேற்று மாலை 6 மணிக்கு மேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதில், சென்னையில் 466 பேருக்கும், செங்கல்பட்டில் 138 பேருக்கும், கோயம்புத்தூரில் 109 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 8,66,982 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நேற்றைய தினம் 668 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 9 பேர் நேற்றைய தினம் உயிரிழந்து உள்ளனர். 

குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்கனவே 168 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மேலும் 17 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஏற்கெனவே 11 பள்ளிகளில் 168 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்றைய தினம் மேலும் 17 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளதால், மொத்த பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 183 ஆக உயர்ந்து உள்ளது. 

முன்னதாக, தமிழகத்தில் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே, தமிழகத்தில் கொரோன பரவல் அதிகரித்திரித்து உள்ளதால், “பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அவசியம் பின்பற்ற வேண்டும்” என்று, தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.