மியூசிக் கலைஞராக தனது திரைவாழ்க்கையை தொடங்கி , பின்னர் மாடல் ஆக அவதரித்து , சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நிதின் குமார்.கன்னடத்தில் ஒளிபரப்பான Shantham Papam என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் நிதின்.இந்த சீரியலில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றார்.

சன் டிவியில் ஒளிபரப்பான மாயா தொடரில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார் நிதின்.இதனை அடுத்து கன்னடத்தில் ஒளிபரப்பான Yajamani என்ற தொடரிலும் நடித்து அசத்தினார் நிதின்.தனது நடிப்பாலும் கடின உழைப்பாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார் நிதின்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி செம ஹிட் அடித்து வரும் என்றென்றும் புன்னகை தொடரில் நடித்து வருகிறார் நிதின்.இந்த தொடரில் நக்ஷத்திரா ஸ்ரீனிவாஸ்,விஷ்ணுகாந்த் ஒரு நாயகன் நாயகியாகவும்.நிதின்,சுஷ்மா நாயர் ஒரு ஜோடியாகவும் முதன்மை வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நடிகராக மாறினார் நிதின்.

இந்த சீரியலில் செம பிட்டாக காட்சியளிக்கும் நிதின்,தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இப்படி இருந்தவரா இப்படி மாறிவிட்டார் என்று ரசிகர்கள் பெரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.வெறும் புகைப்படத்தை பகிர்ந்ததோடு நிறுத்திக்கொள்ளாமல் உடற்பயிற்சி குறித்த முக்கிய தகவல் ஒன்றையும் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.

உடல் எடை குறைப்பு என்பது ஒரு சீரான நடவடிக்கை சாப்பாடு,உடற்பயிற்சி என அனைத்தும் சேர்ந்து தான் இது நடக்கும்.முகத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கிறேன் ஏதேனும் ஒரு பாகத்தின் கொழுப்பை குறைக்கிறேன் என்று எவரேனும் சொன்னால் அதனை நம்ப வேண்டாம் சீரான உடற்பயிற்சி மற்றும் சாப்பாட்டு பழக்கங்களை எடுத்துக்கொண்டால் தானாக உடலெடை குறையும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.உடல்பயிற்சில் பெரிதும் ஆர்வம் கொண்ட இவர் சில தவறான உடற்பயிற்சி தகவலை பார்த்து அதனை ரசிகர்களுக்கு தெளிவுபடுத்த இந்த பதிவை செய்துள்ளார்.