தமிழ் சினிமாவின் மிக முக்கிய கதாநாயகர்களில் ஒருவராகவும் ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக ரிலீஸான திரைப்படம் கடைசி விவசாயி. உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான கடைசி விவசாயி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டுக்களைப் பெற்றது

முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து விக்ரம், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் VJS46, காத்துவாக்குல ரெண்டு காதல், காந்தி டாக்ஸ் எனும் மௌன திரைப்படம் உட்பட விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் YSR  புரோடக்சன் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள மாமனிதன் படத்திலும் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமனிதன் படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடிக்க, குரு சோமசுந்தரம், ஷாஜி சென், ஜுவல் மேரி, அனிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா , யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா இணைந்து இசையமைத்துள்ள மாமனிதன் படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் விரைவில் திரைக்கு வர உள்ள மாமனிதன் படத்தின் தமிழக & கேரள ரிலீஸ் உரிமத்தை பிரபல நடிகரும் தர்மதுரை தயாரிப்பாளருமான R.K.சுரேஷின் ஸ்டுடியோ 9 நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.