சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் பிரபல தமிழ் சினிமா இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் இதனையடுத்து கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்த வை ராஜா வை படத்தை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடர்ந்து சினிமா வீரன் என்ற டாக்குமென்ட்ரி படத்தை இயக்கினார்.

முன்னதாக தனது திரைப்பயணத்தில் ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இயக்கத்தில் வெளியாகும் முஸாஃபிர் எனும் புதிய மியூசிக் வீடியோவை அறிவித்தார். அன்கித் திவாரி இசையில் உருவாகியிருக்கும் முஸாஃபிர் பாடல் தமிழில் பயணி என வெளியானது. விவேகாவின் வரிகளில் பயணி பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். 

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் பாடலை மலையாளத்தில் பாடகர் ரஞ்சித்தும் தெலுங்கில் பாடகர் சாகரும் பாடியுள்ளனர். முஸாஃபிர் மியூசிக் வீடியோவிற்கு  விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய பே ஃபிலிம்ஸ் LLP நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னணி நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் நடித்து நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். 

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பயணி பாடல் இன்று மார்ச் 17ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த பாடலை வெளியிட்டார். சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பயணி பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.