#IPL2022 சீசனின் நேற்றைய போட்டியில், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றபோது, சூப்பர் ட்விஸ்ட் அடித்த குஜராத் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

#IPL2022 சீசனில் நேற்று நடைபெற்ற 16 வது லீக் போட்டியில், #PBKS vs #GT அணிகள் மோதின. இரு அணிகளுமே சம பலம் பொருந்திய அணிகள் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான் என்றாலும், இந்த போட்டியாது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற டாஸ் வென்ற #GT குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

அதன் படி, #PBKS அணியில் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர். 

கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க, அதனைத் தொடர்ந்து வந்த ஜானி பேரிஸ்டோவ் களமிறங்கி 8 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 

பின்னர் வந்த லிவிங்ஸ்டன், ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். அப்போது, லிவிங்ஸ்டன் தனது பாணியில் சற்று அதிரடி காட்ட, மறுமுனையில் சற்று நிதானமாக விளையாடிய வந்த தவான் 35 ரன்களில் அவுட்டானார். 

பின்னர், அதிரடி காட்டி வந்த லிவிங்ஸ்டன் அரைசதம் அடித்து அசத்திய நிலையில், 27 பந்துகளில் 64 ரன்களில் அதிரடியாக சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி, இறுதியில் #PBKS பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழந்து 189 ரன்கள் சேர்த்தது. 

பின்னர், 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் #GTகுஜராத் அணி சார்பில், ஓப்பனிங் வீரர்களாக களமிறங்கிய மேத்யூவ் வேட் 6 ரன்களில், வந்த வேகத்தில் திரும்பினார். ஆனால், எதிர் முனையில் ஓப்பனிங் இறங்கிய சுப்மன் கில் நிதானமாகவும், பொறுப்புடனும் பஞ்சாப் பந்து வீச்சை அடித்து நொறுக்கிக்கொண்டு இருந்தார். இதனால், 2 வது விக்கெட்டிற்கு மட்டும் 101 ரன்கள் சேர்த்தனர். 

சாய் சுதர்சன் 35 ரன்களில் அவுட்டாக, சுப்மன் கில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதனால், அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, கலைந்துப்போனது. 

பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, 27 ரன்களில் எதிர்பாரத விதமாக ரன் ஆகி அதிர்ச்சி அளிக்க, கடைசி 2 பந்துகளில்  #GTகுஜராத் அணி வெற்றிப் பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. 

அப்போது, களத்திற்கிய ராகுல் திவாட்டியா கடைசி நேர மேஜிக் காட்ட, அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார். இதனால்,  #PBKS பஞ்சாப் அணி பணிந்த நிலையில்,  #GTகுஜராத் அணி திரில் வெற்றிப் பெற்றது.

குறிப்பாக, கடந்த 2016 ஆம் ஆண்டு புனே அணிக்காக எனதிரான போட்டியில், சிஎஸ்கே கேப்டன் தோனி விளையாடிய போது, பஞ்சாப் அணிக்கு எதிரான அந்த போட்டியில் அக்சர் பட்டேல் வீசிய ஓவரில் கடைசி 2 பந்தில், 2 சிக்சர் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். தற்போது, அதனை திவாட்டியாவும் செய்து உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் திவாட்டியாவை தற்போது கொண்டாடி வருகின்றனர். இதன் மூலம், தோனி சாதனைiய திவாட்டியா, தற்போது சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடேயே, ஷிகர் தவான் நேற்றைய டி20 கிரிக்கெட்டில் 1,000 பவுண்டரிகளை அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், ஒட்டு மொத்தமாக உலக அளவில் 5 வது வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தி புதிய வரலாறு படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.