“தமிழக கிரிக்கெட் வீரர் “அஸ்வின் நடத்தை அநாகரீகத்தின் எல்லையை ஒருமுறை தொட்ட போது, தோனி மிக கடுமையாகத் திட்டினார்” என்று, விரேந்திர சேவாக் மனம் திறந்து பேசி உள்ளார்.

“ஐபிஎல் 2021 சீசனில் கடந்த 28 ஆம் தேதி நடந்த கொல்கத்தா - டெல்லி கேப்பிடல்ஸ் போட்டியின் போது,  ரிஷப் பந்த் உடலில் பட்டு சென்ற ஒரு பந்துக்கு, ஒரு ரன்னை அஸ்வின் அழைத்து இருவரும் ஓடிய விவகாரம் மிகவும் பூதாகாரமாக வெடித்து உள்ளது. 

ஆனால், “இந்த விவகாரத்தில் பெரிய குற்றவாளி யார் என்றால், தினேஷ் கார்த்திக் தான்” என்று, விரேந்திர சேவாக் மிக கடுமையாகச் சாடி உள்ளார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் அஸ்வினுக்கு ஆதரவாக சேவாக், கம்பீர் போன்றோர் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அதாவது, கடந்த 28 ஆம் தேதி கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த போட்டியின் போது திரிபாதி த்ரோ, ரிஷப் பந்த் உடலில் பட்டு ஓவர் த்ரோவாக மாறியது. ஆனால், இதற்கு ஒரு ரன் ஓட மாட்டார்கள் இது மரபு. அப்படி ரன் ஓடினாலும் அதை தடுக்க முடியாது ஏனெனில் விதி இந்த ரன்னை அனுமதிக்கிறது. 

இவ்வளவு தான் அந்த விதிமுறைகள். இப்படியான சூழல் கடந்த 28 ஆம் தேதி போட்டியில் இப்படியாக ஒரு ரன் எடுக்கப்பட்டது. அப்போது, அஸ்வினைப் பார்த்து டிம் சவுதி ஏதோ கூற, அதற்கு அஸ்வின் பதில் கூற, அப்போது உள்ளே புகுந்த மோர்கன் தரக்குறைவாகப் பேசியது இன்னும் பெரிதாக பேசப்பட்டது.

ஆனால், “அஸ்வினைப் பற்றி மோர்கன் பேசியது யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால், இதனை தினேஷ் கார்த்திக்தான் அதை போட்டு உடைத்தார் என்றும், அதிலிருந்து இது பூதாகாரமாகக் கிளம்பி பலதரப்புகளில் இருந்தும் கடும் விமர்சனங்கள்” எழுந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய சேவாக், “தினேஷ் கார்த்திக் மட்டும் இந்தச் சம்பவத்தைக் கூறியிருக்காவிட்டால், இந்த விவகாரமே ஆகியிருக்காது என்றும், இப்படிப்பட்டதை எல்லாம் வெளியில் வந்து சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்கு உதாரண சம்பவம் ஒன்றைக் குறிப்பிடும் போது, அஸ்வின் இதற்கு முன்னால் ஒருமுறை அநாகரீகமாக நடந்து கொண்டதையும்” சேவாக் குறிப்பிட்டு உள்ளார்.

அதன் படி, “நான் பஞ்சாப் அணிக்கா விளையாடிய போது, மேக்ஸ்வெல் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். அதைக் கொண்டாடத் தரையிலிருந்து மண்ணை எடுத்து அவர் ஊதி செய்கை செய்து அஸ்வின் கொண்டாடினார்.

ஆனால், அஸ்வின் அப்படி அநாகரிகமாக நடந்துகொண்டது கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கவில்லை. ஆனால், நான் பொது வெளியில் வந்து அஸ்வின் இப்படிச் செய்திருக்கக் கூடாது என்றோ, இது ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் இல்லை என்றோ கூறவில்லை. அது அதோடு முடிந்தது.

ஆனால், அங்கு நின்ற சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு, அஸ்வினின் செய்கை இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. கடும் கோபம் அடைந்த தோனி, அஸ்வின் மீது கடும் கோபமடைந்து, அஸ்வினை மிக கடுமையாகக் கண்டித்தார்” என்று, சேவாக் மனம் திறந்து பேசி உள்ளார்.