புதிய வேளாண் சட்ட மசோதாக்களை ஆதரித்து பாஜக சார்பில் மறைமலைநகரில் நடைபெற்ற விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். 


அப்போது பேசிய அவர், ‘’ வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும்  இல்லை. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கான விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. பஞ்சாப் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். ஆனால் வேளாண் சட்டங்கள் மூலம் அதிக பலன் பெறுவது பஞ்சாப் விவசாயிகள்தான். பொது வெளியில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக ராகுல் காந்தியுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். 


இங்கு மற்ற கட்சிகள் குடும்பக் கட்சிகளாக இருக்கிறது. நாடு முழுவதும் பா.ஜ.க.வின் வெற்றி அதிகரித்து வருகிறது. எல்லா இடங்களிலும் காங்கிரஸுக்கு சரிவு தான் ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கூட்டணி என்று இருந்தால் அதில் ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் என்பது இயல்பு. அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் மட்டுமில்லை. எந்தக் கூட்டணி என்றாலும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்க வேண்டும். 


தமிழகத்திலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும்’’ என்று தெரிவித்தவர் . அதிமுக - பாஜக கூட்டணி பற்றிய கேள்விக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.