ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள சம்பவம், உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் தான் இப்படி ஒரு தண்டனை ஒரே நேரத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

தண்டனைகள் அதிகம் இருந்தால் தான், குற்றங்கள் குறையும் என்கிற ஒரு பலமான குரல், பல காலமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஒலித்துக்கொண்டு தான் இருக்கின்றன.

அதுவும், இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் அரங்கேறும் போதெல்லாம், இப்படியான குரல் தொடர்ந்து அதிகமாக ஒலிப்பது வழக்கமான ஒன்றாகவே மாறியிருக்கிறது. ஆனால், அப்படியான ஒரு தண்டனை இந்தியாவில் பெரும்பாலும் யாருக்கும் கிடைக்கவில்லை என்பது ஒரு சோகமான நிகழ்வுதான்.

ஆனால், இஸ்லாமியர்களின் நாடுகளில் தண்டனைகள் எப்போதும் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். அப்படியான ஒரு தண்டனை தான், தற்போது சவுதி அரேபியா நாட்டில் நிறைவேற்றப்பட்டு, உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

அதாவது, சவுதி அரேபியா நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 81 பேருக்கு, ஒரே நாளில் அதிரடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இது குறித்து, அந்நாட்டின் அரசு செய்தித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அப்பாவி ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கொலை செய்தவர்களுக்கும், அல் கய்தா, ஐ.எஸ். மற்றும் ஹவுதி கிளச்சியாளர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளதாக” அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும், “குற்றவாளியாக கருத்தப்பட் இந்த 81 நபர்களுக்கும், அவர்களுக்கான மரண தண்டனை எவ்வாறு? எப்படி? நிறைவேற்றப்பட்டது” என்பது பற்றிய எந்த தவலும் அதில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை. 

ஆனால், சவுதி அரேபியா நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் தண்டனையானது, “தவறு செய்யும் நபர்களின் கழுத்தை அறுத்து, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு” வருவது நடைமுறையில் இருந்து வருகிறது.

குறிப்பாக, சவுதி அரேபியாவில் கடந்த 1980 ஆம் ஆண்டு, மெக்கா மசூதியை கைப்பற்றிய போராட்டகாரர்கள் 63 பேருக்கு, அந்நாட்டில் ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

அதன் தொடர்ச்சியாக, 42 வருடங்கள் கடந்த நிலையில், தற்போது சற்று அதிகமாக மொத்தம்  81 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள சம்பவம், உலகம் முழவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.