முன்னணி தமிழ் யூடியூப் சேனல்களில் ஒன்றான பரிதாபங்கள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. முன்னதாக மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் கலக்கிய கோபி-சுதாகர் கூட்டணி இணைந்து கலக்கும் இந்த பரிதாபங்கள் சேனலில் சமகாலத்தில் நிகழும் நிறைய ட்ரெண்டிங் மற்றும் அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவை கண்டன்ட்களாக மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

யூடியூபில் சாதித்த கோபி-சுதாகர் ஜோடி தமிழ் திரையுலகிலும் மீசையை முறுக்கு மற்றும் ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தனர். இதனையடுத்து கிரவுட் ஃபண்டிங் மூலமாக இவர்கள் தயாரிப்பில் மணி கம் டுடே கோ டுமாரோ எனும் திரைப்படத்தை தொடங்கினர்.

நீண்ட நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மணி கம் டுடே கோ டுமாரோ படத்தின் படப்பிடிப்பு இன்னும் பல காரணங்களால் முற்றில  நிறைவு பெறாத நிலையில் விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என சில மாதங்களுக்கு முன்பு கோபி - சுதாகர் அறிவித்தனர்.

இதனிடையே கடந்த ஆண்டு இறுதியில் பரிதாபங்கள் சுதாகருக்கு சிவகாசியில் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது பல யூடியூப் பிரபலங்களும் திரை பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் பரிதாபங்கள் சுதாகரன் திருமண புகைப்படங்கள் இதோ…